பிரியாணி சாப்பிட வந்த வாலிபரின் பைக் 'அபேஸ்'
அண்ணா நகர், அம்பத்துார், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் ரமணா, 20. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன், பிரியாணி சாப்பிட அண்ணா நகர், 5வது பிரதான சாலையில் உள்ள பிரியாணிக்கு கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.
கடையின் வெளியில் வாகனத்தை நிறுத்தி, உணவகத்திறக்குள் சென்றுள்ளார். பின், திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று அண்ணா நகர் போலீசில் விக்னேஷ் ரமணா புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement