மேற்கு மாம்பலத்தில் நாளை கோ பூஜை விழாவிற்கு ஏற்பாடு
மேற்கு மாம்பலம்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில், 49ம் ஆண்டு மாட்டு பொங்கல் கோ பூஜை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் உள்ள கோ ஸம்ரக் ஷண சாலாவில், நாளை நடக்கிறது.
காலை 7:00 மணிக்கு டாக்டர் வி.ராமச்சந்திரன் குழுவினரின் மங்கல இசை, 8:30 மணிக்கு மாதங்கி சங்கர் மற்றும் குழுவினரின் தேவாரம் மற்றும் திருப்புகழ் இன்னிசை, 10:30 மணிக்கு சிறப்பு கோ பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, 11:00 மணிக்கு பசுக்கள் மாட வீதியில் ஊர்வலம் நடக்க உள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பங்கேற்று. சிறப்புரை வழங்க உள்ளார்.
இங்கு, வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, பக்தர்களே நேரடியாக பங்கேற்கும் கோ பூஜை, மாலை 7:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடக்க உள்ளதாக, டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement