'டாப்-20' பட்டியலில் ஜெமிமா * பெண்கள் ஒருநாள் தரவரிசையில்
துபாய்: ஒருநாள் பேட்டர் தரவரிசையில் 'டாப்-20' பட்டியலில் இடம் பிடித்தார் இந்தியாவின் ஜெமிமா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஜெமிமா, 3 இடம் முன்னேறி, 19 வது இடம் பிடித்தார்.
ஒருநாள் அரங்கில் அறிமுகம் ஆன, 7 ஆண்டுக்குப் பின் சமீபத்தில் முதல் சதம் (1ழ02, எதிர்-அயர்லாந்து) விளாசினார். இதையடுத்து 563 புள்ளியுடன் 'டாப்-20' பட்டியலில் நுழைந்தார்.
இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா (723 புள்ளி) 3வது இடத்தில் தொடர்கிறார். ஹர்மன்பிரீத் கவுர் (611), ஒரு இடம் பின்தங்கி, 14 வதாக உள்ளார்.
முதல் இரு இடத்தில் தென் ஆப்ரிக்காவின் லாரா (773), இலங்கையின் சமாரி அத்தபத்து (733) உள்ளனர்.
பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 672 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இங்கிலாந்தின் சோபி (779) உள்ளார்.