மதுரை-சென்னைக்கு சிறப்பு ரயில்
மதுரை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை செல்வோரின் வசதிக்காக இன்று (ஜன. 15) இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்டமுன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயில் (06164) நாளை அதிகாலை 3:20 மணிக்கு எழும்பூர் செல்லும். திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக இயக்கப்படும்.
ஜன.18 காலை 10:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்டமுன்பதிவில்லா மெமுசிறப்பு ரயில் (06061) இரவு 7:15 மணிக்கு மதுரை வரும். ஜன.19 மாலை 4:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் மெமுசிறப்பு ரயில் (06062) மறுநாள் அதிகாலை 12:45 மணிக்கு எழும்பூர் செல்லும்.
ஜன.19 மாலை 4:25 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06168) விருதுநகர், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு தாம்பரம் செல்லும். 7 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.