துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

5

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.


இங்கு, பெங்களூரு பாராசூட் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் வீரர்கள் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும் போது, அங்கு பொதுமக்கள் நடமாட, கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.


இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்ற விவசாயியின், செம்மறி ஆடுகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், ஆறு ஆடுகள் இறந்தன. இரு ஆடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement