ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்

பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ள மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், ஆண்டு தோறும் மகர விளக்கு உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் நேற்று காலை நடை திறப்புடன் துவங்கியது.

அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவருக்கு உஷ பூஜை, காலை, 9:30 மணிக்கு செண்டைமேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த 'கருவந்தலை கணபதி' என்ற யானை மீது, புழைக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தது.

அதன்பின், செண்டைமேள வித்வான் வட்டேக்காடு சசி குழுவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட 'பஞ்சாரிமேளம்' என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

காலை, 11:00 மணிக்கு புஷ்ப அலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை, யானைக்கு உணவளிக்கும் யானை யூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement