ஊழியர்கள் 3600 பேரை நீக்குகிறது மெட்டா!

5

கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தில் 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு எடுத்துள்ளார்.



உலகின் முன்னணி நிறுவனங்கள் இப்போது ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதன் தாக்கம் இனி வரக்கூடிய ஆண்டுகளில் அதிகம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.


இந்நிலையில், பேஸ்புக், insta gram, whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக, நிறுவனத்தின் உள் வட்டாரங்களில் ஒரு நினைவூட்டலை அவர் வெளியிட்டு உள்ளார். நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.


அதில் பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான போதிய இழப்பீடும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பின்படி 5 சதவீதம் என்பது தற்போது நிறுவனத்தில் உள்ள 72000 பேரில் 3600 ஊழியர்கள் ஆகும். இவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

Advertisement