முழுமையாக குணமடையும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்; புற்றுநோய் பாதித்த வேல்ஸ் இளவரசி உருக்கம்

3

லண்டன்: பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது கீமோதெரபி சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.


பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேட் மிடில்டன்,42 புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தது அரசு குடும்பத்தினரை கவலை அடைய செய்தது.


கடந்த ஆண்டு இரு வாரம் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டிருந்த போது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது கீமோதெரபி அளிக்கப்பட்டு வந்தது. இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டது என கூறியிருந்தார்.


இந்நிலையில், இன்று (ஜன., 15) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது கீமோதெரபி சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது ;


கடந்த ஒரு வருடத்தில் என்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தேன். கணவர் மற்றும் என்னுடன் அமைதியாக நடந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஒரு நோயாளியாக இருந்த காலம் முழுவதும் நான் பெற்ற அறிவுரைகளும், கவனிப்போம் அதிகமானவை.


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும். முழுமையாக குணமடைய நிறைய நாட்கள் ஆகும். நான் தற்போது சிகிச்சை முடிந்து நிம்மதியாக இருக்கிறேன். இருப்பினும் முழுமையாக குணமடையும் நாட்களை எதிர்நோக்குகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement