டிபென்டர் 2025 ஆப்ரோட் பீஸ்ட் ஜெ.எல்.ஆர்.,நிறுவனத்தின் அறிமுகம்

ஜெ.எல்.ஆர்., நிறுவனம், அதன் 'டிபென்டர் 2025' மாடல் அப்ரோட் எஸ்.யு.வி.,யை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், ஐந்து முதல் எட்டு சீட்டர் வகையிலும், '90, 110 மற்றும் 130' என வெவ்வேறு வீல் பேஸ் வகையிலும் வருகிறது. வழக்கம் போல, இது உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த, ஐந்து லிட்டர், வி - 8 இன்ஜின், தற்போது குறைந்த செயல்திறனில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதன் பவர் 94 ஹெச்.பி., மற்றும் டார்க் 15 என்.எம்., குறைக்கப்பட்டுள்ளது. இதோடு, இரண்டு லிட்டர்; நான்கு சிலிண்டர் மற்றும் மூன்று லிட்டர்; ஆறு சிலிண்டர் என மொத்தம் மூன்று வகை இன்ஜின்களில் இந்த கார் வருகிறது.

நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு கார் அமைப்புகளை மாற்றிக்கொள்ளும் 'டெரைன் ரெஸ்பான்ஸ்' மோடு மற்றும் 'எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன்' வசதி ஆகியவை அடிப்படை அம்சங்களாக வழங்கப்படுகிறது.

மேலும், 20 அங்குல அலாய் சக்கரங்கள், ஆல் டெரைன் டயர்கள், ஹீட்டட் மற்றும் கூல்டு எலக்ட்ரானிக் முன்புற சீட்கள், 11.4 அங்குல டச் ஸ்கிரீன் அமைப்பு, அலங்கார விளக்குகள், பானரோமிக் சன் ரூப், குளிர்சாதனப் பெட்டி என பல அம்சங்கள் இதில் உள்ளன.

விலை - ரூ. 1.39 கோடி முதல்



விபரக்குறிப்பு


இன்ஜின்: 5 லிட்டர், 8 சிலிண்டர், வி 8

பவர்: 425 ஹெச்.பி.,

டார்க்: 510 என்.எம்.,

(0 - 100 கி.மீ.,) - பிக்கப் 5.4 வினாடி

டாப் ஸ்பீடு: 240 கி.மீ.,

Advertisement