பெண்கள் ஹாக்கி: சூர்மா சூப்பர்
ராஞ்சி: பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட்டில் பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ஒடிசா வாரியர்ஸ், சூர்மா கிளப் (பஞ்சாப், ஹரியானா) அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 6வது நிமிடத்தில் சூர்மா அணியின் அஜ்மினா கவுர் கொடுத்த பந்தை பெற்ற சோபி ஹாமில்டன், பந்தை ஒடிசா அணி கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். அங்கிருந்த ஹினா பானோ அப்படியே வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றினார்.
போட்டியின் 46 வது நிமிடத்தில் சூர்மா வீராங்கனை சோனம், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். ஒடிசா தரப்பில் 57 வது நிமிடம் ஒரு கோல் அடிக்கப்பட்டது.
முடிவில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement