தேசியம்
பா.ஜ.,வுக்கு பங்கு இல்லை!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. ஆனால், பா.ஜ.,வுக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு இல்லை. சிறைக்கு செல்லாத அல்லது எந்த தியாகமும் செய்யாத ஒருவரால் சுதந்திரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாது.
சச்சின் பைலட்
மூத்த தலைவர்,
காங்கிரஸ்
காங்கிரசுக்கு ஆதரவில்லை!
டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பதில், ஆம் ஆத்மியை சமாஜ்வாதி ஆதரிக்கும். அப்படி என்றால், இண்டி கூட்டணி உடைந்ததா என்றால், இல்லை. இண்டி கூட்டணி அப்படியே உள்ளது. கூட்டணி உருவான போதே, மாநிலத்தில் வலுவாக உள்ள கட்சியை ஆதரிப்பது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
முழு ஆயத்தத்துடன் போட்டி!
பகுஜன் சமாஜ் கட்சி டில்லி தேர்தலில் முழு ஆயத்தத்துடன் போட்டியிடுகிறது. முறைகேடுகள் ஏதுமில்லாமல் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். அண்டை மாநில மக்களை பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளுமே பாகுபாட்டுடன் நடத்துகின்றன.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்