பாட்மின்டன்: அனுபமா அபாரம்

புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா வெற்றி பெற்றார்.
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நேற்று டில்லியில் துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனுபமா 19, சக வீராங்கனை, கோவையை சேர்ந்த ரக்சித்தா ஸ்ரீயை எதிர்கொண்டார். இதில் அனுபமா 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் மாளவிகா, ஆகர்ஷி தோல்வியடைந்தனர்.
பிரனாய் ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பிரனாய், 21-16, 18-21, 12-21 என்ற கணக்கில் தைவானின் லி யங் சுவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் லக்சயா சென், 15-21, 10-21 என்ற கணக்கில் தைவானின் லின் சன் யிவிடம் தோற்றார். இந்தியாவின் பிரியான்ஷு, 16-21, 22-20, 13-21 என ஜப்பானின் நரவோகாவிடம் போராடி வீழ்ந்தார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-11, 21-12 என சக இந்தியாவின் காவ்யா, ராதிகா ஜோடியை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி, (7-21, 21-19, 21-14), தாய்லாந்தின் ஜன்பெங், பத்தரின் ஜோடியை வீழ்த்தியது.

Advertisement