ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

கிளீவ்லாந்து: சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 'நம்பர்-2' வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), போர்ச்சுகலின் ருய் சோரசை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 11-5 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் அசத்திய இவர், 11-6 வென்றார்.
முடிவில் வேலவன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற எகிப்தின் தரேக் மோமெனை எதிர்கொள்கிறார்.

Advertisement