சென்னை பல்கலை பீச் வாலிபால் எம்.ஓ.பி. வைஷ்ணவா முதலிடம்
சென்னை, சென்னை பல்கலையின் பீச் வாலிபால் போட்டியில், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லுாரி 'ஏ' மற்றும் 'பி' அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
சென்னை பல்கலையின் பீச் வாலிபால் போட்டி, நேற்று முன்தினம், பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில், எம்.ஓ.பி வைஷ்ணவா, ராணிமேரி, டபிள்யூ.சி.சி., - நாசரத், சோகா இகெதா உள்ளிட்ட அணிகள் மோதின.
முதல் அரையிறுதியில், எம்.ஓ.பி. வைஷ்ணவா 'ஏ' அணி, 15 - 11, 15 - 13 என்ற கணக்கில், டபிள்யூ.சி.சி.,யை தோற்கடித்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில், எம்.ஓ.பி. வைஷ்ணவா 'பி' அணி, 15 - 10, 15 - 3 என்ற கணக்கில், ராணிமேரி அணியை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், எம்.ஓ.பி. வைஷ்ணவா 'ஏ' அணி, 15 - 8, 15 - 11 என்ற கணக்கில், அதே கல்லுாரியின், 'பி' அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.