2 நாளில் முடிவுக்கு வருகிறது வடகிழக்குப் பருவமழை!

சென்னை: இரு நாட்களில் வடகிழக்கு பருவமழை விலகும். 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை;


வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


அதன் காரணமாக வரும் (ஜன) 28ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.30ம் தேதி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.31ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை மைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement