கிள்ளை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்

கிள்ளை : நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட கிள்ளை அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில், விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகளில், மாநில அளவில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.

சாதனைப்படைத்த மாணவர்களை பாராட்டி, சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி கிளப் சார்பில் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். சங்க தலைவர் ஜாபர் அலி சீருடை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாரதி நன்றி கூறினார்.

Advertisement