சாலையில் 'முதல்வர்' ஸ்டிக்கர் பெண்ணாடம் அருகே பரபரப்பு

பெண்ணாடம் : கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து பெ.கொல்லத்தங்குறிச்சி வழியாக வேப்பூர், நல்லுார் செல்லும் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

பெண்ணாடம் - பெ,கொல்லத்தங்குறிச்சி கைகாட்டி பஸ் நிறுத்தம் வரை கடந்த 2 நாட்களுக்கு முன் புதிதாக தார் சாலை போடப்பட்டது.

அதில், பெ.கொல்லத்தங்குறிச்சி ரயில்வே கேட் முதல் அங்குள்ள சுப்ரமணியர் கோவில் வரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த 'ஸ்டாலின் தான் வராரு... விடியல் தரப் போறாரு' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் புதிதாக போடப்பட்ட சாலையின் நடுவே ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கரை பார்த்து செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பலர் பார்த்து 'இது ஓவர்தான்' என கமென்ட் அடித்தபடி கடந்து செல்கின்றனர்.

Advertisement