பொங்கல் விழா கொண்டாட்டம்

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு மற்றும் வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ் தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ், நிர்வாக செயலர் பவித்ராதீபக், பள்ளி துணைமுதல்வர் சாந்தி முன்னிலை வகித்தனர்.

ஜெஸ்டினா வரவேற்றார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஸ்ரீசரஸ்வதி பள்ளி



சேத்தியாத்தோப்பு ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

முதல்வர் ரேணுகாகண்ணன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்



பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன் தலைமை தாங்கினார்.

செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

Advertisement