10 ஆயிரம் கிலோ வெல்லம் பறிமுதல்
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தில் சாராய ரெய்டு சென்றனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக பல வீடுகளில் மறைத்து வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement