மேட்டூர் தமிழ் மன்றம் சார்பில் 63வது ஆண்டு பொங்கல் விழா
போத்தனூர்: கோவை, போத்தனூர் அடுத்த மேட்டூரிலுள்ள தமிழ் மன்றம் சார்பில், 63வது ஆண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது.
இதனையொட்டி, சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஐந்து முதல், 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு, லெமன் ஸ்பூன் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தன.
பெண்களுக்கு இசை நாற்காலி, லக்கி கார்னர் உள்ளிட்டவை நடந்தன. பெண்களுக்கான உரியடித்தலில் ரித்திகா, ஆண்கள் பிரிவில் சீனிவாசன் ஆகியோர், வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, கிச்சன் செட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதுபோல், குனியமுத்தூர் பகுதி தி.மு.க., சார்பில், ராஜகோபால் நகரில் நடந்த விழாவில், 115 பேர் சமத்துவ பொங்கல் வைத்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி., ஈஸ்வரசாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் பரிசு வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும், நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பகுதி செயலாளர் லோகனாதன் செய்திருந்தார்.
* மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பெண் போலீசார் பொங்கல் வைத்தனர். பேரூர் சரக டி.எஸ்.பி., சிவகுமார், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நவனீதகிருஷ்ணன், போலீஸ் குடும்பத்தார் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.