அரசு பெண்கள் கல்லுாரியில் காத்திருக்குது ஒரு கட்டடம்

கோவை : அரசு பெண்கள் கலைக் கல்லுாரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை, விரைந்து திறந்து வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கல்லுாரி துவங்கப்பட்டது முதல், இடப்பற்றாக்குறை இருந்து வந்தது. இதைக்கருத்தில் கொண்டு, ரூ.13.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கப்பட்டது.

தற்போது பணிகள் முழுவதும் முடிந்துள்ளன. ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருந்ததால், கட்டடம் செயல்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடித்தது. தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னரும், கட்டடம் செயல்பாட்டுக்கு வரவில்லை. முதல்வரின் தேதிக்காக காத்திருப்பதாக கூறப்படும் நிலையில், கட்டடத்தை விரைவில் துவங்க வேண்டும் என, மாணவியர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement