கள்ளக்குறிச்சி காவல் துறை பொங்கல் கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவினை எஸ்.பி., ரஜத்சதுர்வேதி துவக்கிவைத்தார். விழாவில் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து ஓட்டப்பந்தயம், உறியடித்தல், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் ஏராளமான காவலர்களின் குழந்தைகள் பங்குபெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட காவல்துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். ஏ.டி.எஸ்.பி.,சரவணன், டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ராபின்சன், உள்ளிட்ட போலீஸ் அலுவலர்கள் பொங்கல்விழாவை கொண்டாடினர்.

Advertisement