'கிரெடிட் கார்டு' லிமிட்டை அதிகரித்து தருவதாக மோசடி * ரூ. 7 லட்சத்தை இழந்தார் முதியவர் 

கோவை : கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரித்து தருவதாக கூறி, முதியவரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

செல்வபுரம், சாவித்திரி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார், 62; தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக, பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மொபைல் எண்ணிற்கு கடந்த மார்ச் 10ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதியவரின் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரித்து தருவதாக கூறினார்.

அதற்காக, கிரெடிட் கார்டு எண், ஓ.டி.பி., வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கேட்டு பெற்றுக்கொண்டார்.

இதன் பின், முதியவரின் கிரெடிட் கார்டில் இருந்து, முதலில் ரூ. 1 லட்சம், பின்னர் ரூ. 3.40 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு போனில் முதியவரை அழைத்து, செல்போன் தொலைதொடர்பு நிறுவனத்தில் (டிராய்) இருந்து பேசுவதாக கூறி மிரட்டி, மேலும், ரூ. 2.38 லட்சம் பணத்தை அபகரித்துள்ளார். முதியவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement