கடன் வாங்கி ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்கு 

கோவை, : இளம் பெண்ணிடம் கடன் பெற்று, திருப்பித்தராமல் ஏமாற்றியவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

துடியலுார், அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூரணி, 24. இவரது நண்பர் முகமது ஜலாலுதீன். இவர் அவசர தேவை எனக் கூறி, பூரணியிடம் பணம் கேட்டுள்ளார். பூரணி நண்பர் என்பதால், தனது 14 சவரன் நகைகளை அடகு வைத்து, ரூ. 6.95 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து, மாதங்களுக்கு பிறகு, பூரணியின் தோழியான அனுஷாவிடம் இருந்து ரூ. 2.99 லட்சம் கடனாக பெற்றார். நீண்ட நாட்களாக திருப்பித் தராததால், பூரணி கொடுத்த கடனை திருப்பி கேட்டார்.

அதற்கு ஜலாலுதீன், ரூ.7 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அதை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாததால் திரும்பி வந்தது. ஜலாலுதீன் குறித்து பூரணி விசாரித்த போது, அவர் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதனிடையே, பூரணியின் தோழி அனுஷா, ஜலாலுதீனுக்கு தான் கொடுத்த பணத்தை, பூரணியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணத்தை பெற்றுத் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

பூரணி துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜலாலுதீன், அனுஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement