அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, வைர விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் லட்சுமி விளையாட்டு உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் உறுதிமொழி ஏற்று போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் ராமச்சந்திரன், ஆசிரியை தாமரைச்செல்வி ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவிற்கு டி.இ.ஓ., ரேணுகோபால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கீதா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுபா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, செயலாளர் கிரிராஜூலு, துணை தலைவர் அப்துல்கலீல், கவுன்சிலர்கள் சீனுவாசன், யுவராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி வாழ்த்துரை வழங்கினர். உதவி தலைமை ஆசிரியை வசந்தா நன்றி கூறினார்.
பள்ளியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து தகைசால் பள்ளிக்கான சின்னத்தை அறிமுகப்படுத்தி சி.இ.ஓ., கார்த்திகா கொடியேற்றினார். ஆசிரியைகள் லதா, ஆண்டாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.