சத்யசாயி சேவா சமிதியில் சத்யநாராயண பூஜை

கள்ளக்குறிச்சி: சத்யசாயி சேவா சமிதி சார்பில் உலக நலன் வேண்டி சத்யநாராயணபூஜை நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா சமிதியில் சாயி பாபாவின் நூற்றாண்டு விழா தொடக்கமாக உலகநன்மைக்காக கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், சத்யநாராயண பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை கன்வீனர் கணேசன், சேவை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், சமிதி பொறுப்பாளர்கள் விஜயா, உஷா, ஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement