மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் காளைகளுக்கு படையல் வழிபாடு
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு படையல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், விவசாயப் பணிகளில் தோழனாகவும் விளங்கும் கால்நடைகளுக்கு, நன்றிக் கடன் செலுத்தும் விதமாகவும், இயற்கையின் ஆசானாக விளங்கும் சூரியனுக்கு வழிபாடு செய்யும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் பட்டகோவில்களம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அனைத்து மாடுகளையும் அலங்கரித்தனர்.
அந்தந்த கிராமங்களில் பங்காளிகள் அடிப்படையில் கூடி மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்ததை தொடர்ந்து அனைத்து பானைகளில் இருந்தும் ஒரு பொங்கல் எடுக்கப்பட்டு அதை வைத்து படையல் போடப்பட்டது. சாமியாடிகள் குலதெய்வம் ஆடி அருள்வாக்கு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement