சிவகங்கையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் விபத்து

சிவகங்கை: சிவகங்கை தொண்டி ரோடு மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் இருப்பதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் சூழல் ஏற்படுகிறது.

சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதித்தல், சுத்திகரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாகப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெருமாள் கோவில் பழைய இசைப்பள்ளி அருகே ரோட்டில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது.

மேலும் நகராட்சி அலுவலகம் அருகே மேம்பால சர்வீஸ் ரோட்டில் அடுத்து அடுத்து இரண்டு பாதாள சாக்கடை குழிகளில் மூடி முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த ரோடு வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஆயுதப்படை குடியிருப்பு, வந்தவாசி, ரோஸ் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் செல்கின்றனர். ரோட்டின் அருகில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்து பள்ளமாக இருப்பதால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement