வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் அன்னதானம்

அன்னுார் : அல்லிகுளத்தில், அன்னுார் வள்ளலார் சன்மார்க்க சங்கம் செயல்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக, தினமும் காலையில், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் 300 பேருக்கு மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதிவாரம் செவ்வாய்க்கிழமையன்று அரசு மருத்துவமனை மற்றும் முதியோர், ஆதரவற்றோர் 250 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் தொடங்கியது.

சன்மார்க்க சங்கத்தினர், நேற்று அரசு மருத்துவமனை முன் அன்னதானம் வழங்கினர். 'இப்பணியில் பங்கேற்க விரும்புவோர், 77087 72241, என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement