நர்த்தன விநாயகர் அருள்பாலிப்பு
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் பொங்கல் திருநாளையொட்டி விநாயகர், ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட மூலவர் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் உற்சவர் நர்த்தன விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு காலை 5:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து 7:30 மணிக்கு நர்த்தன விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் நடனம் ஆடியபடி ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement