பொங்கல் பண்டிகை கோலாகலம்

கடலுார் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடாப்படும் பொங்கல் விழாவில், விவசாயிகள், பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு புதுபானையில் மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்து அணிவித்து புத்தரிசியில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

முக்கிய அங்கமான கரும்பு வைத்தும் வழிபாடு செய்தனர். பொங்கல் பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நகரப் பகுதிகளில் குடியிருப்போர் சங்கங்களிலும், கிராமங்களில் ஊர் பொது இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொங்கல் பண்டிகையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement