மூணாறு அருகே புலி தாக்கி காயம் அடைந்த பசு பலி

மூணாறு: மூணாறு அருகே புலி தாக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய பசு இறந்தது.

மூணாறு அருகே குட்டியாறுவாலியில் வசிப்பவர் பாலன். இவரது மூன்று பசுக்கள் ஜன.11ல் மேய்ச்சலுக்கு சென்றபோது, மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 22ல் புலி தாக்கி இரண்டு பசுக்கள் இறந்து கிடந்தன. ஒரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை பசு இறந்தது.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலனின் பசு புலியிடம் சிக்கி பலியானது. தற்போது மூன்று பசுக்கள் இறந்தன. பசுக்களின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு பாலன் பிழைப்பு நடத்தி வந்த நிலையில், அவை பலியானதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

குட்டியாறுவாலியில் கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி பலியாகின. அதனால் அப்பகுதி மக்கள் கால்நடைகளை வளர்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement