கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பெ.நா.பாளையம் : அசோகபுரம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அசோகபுரம் ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அசோகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊராட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பொதுமக்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

அதில், அசோகபுரம் ஊராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். எனவே அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, தெரிவித்தனர்.

மேலும், மனுவின் நகலை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.

Advertisement