தேனியில் அனுமதியின்றி மது விற்பனை தாராளம்

தேனி: தேனியில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக், தனியார் மதுபார்கள் செயல்படக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஆனால், தேனியில் பல பகுதிகளிலும் உள்ள பெட்டிக்கடைகள், ரோட்டங்களில் மதுபாட்டில் விற்பனை செய்பவர்கள் முன்கூட்டியே மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி சில்லரை விற்பனையில் கூடுதல் விலைக்கு விற்றனர். குறிப்பாக தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் ரோட்டில் காலை முதல் இரவுவரை பாட்டில் விற்பனை ஜோராக நடந்தது. போலீசாரும் கண்டும் காணமல் இருந்தனர்.

அப்பகுதியில் சில ரோட்டுக்கடைகள் செயல்படாவிட்டாலும், அங்கு பாட்டில் விற்பனை ஜோராக நடந்தது.

Advertisement