டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் பாண்டி 50. நேற்று காலை 9:30 மணிக்கு தனது தோட்டத்திற்கு வேலை நடப்பதை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார்.

எதிரே சபரிமலைக்கு சென்று விட்டு கர்நாடகா சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து ஏற்படுத்திய கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பிரசன்னா 45.வை, தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை கைது செய்தார்.-

Advertisement