சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
நெகமம் : நெகமம் அருகே சுந்தரகவுண்டனுாரில், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெகமம், சுந்தரகவுண்டனுாரில் சேவல் வைத்து சூதாட்டம் நடப்பதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, தொடர்ந்து அப்பகுதியில் சோதனை செய்த போலீசார் ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி சேர்ந்த பிரதீப்,- 29, அந்தோணி ஸ்டீபன், - 44, கொல்லப்பட்டியைச்சேர்ந்த கார்த்திக், - 37, மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த சுகுமார் - 39, சுந்தரகவுண்டனுாரைச்சேர்ந்த ராசு,- 55, கவுதம்,- 46, உடுமலையைச்சேர்ந்த சரவணன்,- 33, ஆகிய 7 நபர்கள், 4 சேவல்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை நெகமம் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
இதே போன்று கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் சேவல் வைத்து சூதாடிய, அரசம்பாளையதைச்சேர்ந்த சூர்யா, 23 மற்றும் சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த அசோக் குமார், 18 ஆகியோரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.