மாட்டு வண்டியில் வந்த அமைச்சர்

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்த அமைச்சர் சக்கரபாணி உறி அடித்து அனைத்து மதத் தலைவர்கள் முன்னிலையில் பொங்கலை கொண்டாடினார்.

நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து முருகன் வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.

அனைவருக்கும் புத்தாடைகள் , நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்திய புவனா, துணைத் தலைவர் தங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன், துணைத் தலைவர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.

Advertisement