'ஓவர்டைம்' வேலை பார்க்கும் உடன்பிறப்புகள்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை விவகாரம் பற்றி பேட்டி கொடுத்தபோது, தி.மு.க.,வின் செயல் திட்டங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கி இருந்தார். தி.மு.க., மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் போதெல்லாம், 'கவர்னர், ஹிந்தி திணிப்பு, வரி பகிர்வு, மாநில உரிமை என, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு உருளத் துவங்கி விடுவர்' என குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னது போல, புத்தாண்டு பிறந்ததிலிருந்து, கவர்னர் செயல்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு விட்டனர் உடன்பிறப்புகள்.

பொதுவாக ஓரிரு நாட்கள் மட்டுமே ஒரு தலைப்பை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது தி.மு.க.,வின் வாடிக்கை. ஆனால், இம்முறை மக்கள் மத்தியில், அரசு மீது இருக்கும் வெறுப்பு, கவர்னர் கொடுத்த அடி எல்லாம் சேர்ந்து, இவர்களை 'ஓவர்டைம்' வேலை செய்ய வைத்துள்ளது.

- எஸ்.ஆர்.சேகர்,

பொருளாளர்,

தமிழக பா.ஜ.,

Advertisement