தரமான காற்று; தமிழக நகருக்கு முதலிடம்; அது எந்த ஊரு தெரியுமா?
புதுடில்லி: நாட்டில் மாசில்லாத காற்று இருக்கும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகளவு மாசடைந்து கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பனிமூட்டத்தால் இருள் சூழ்ந்து காணப்படும் டில்லியில், காற்று மாசுபாடும் கவலைக்குரிய விஷமாக உள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாட்டில் கவலைக்குரிய தரக்குறியீட்டையே பெற்றுள்ளது.
அதே வேளையில், நாடு முழுவதும் உள்ள அதிகம் பாதித்த மற்றும் தரமுள்ள காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியானது.
அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை விளங்குகிறது. 5வது இடத்தில் தஞ்சை உள்ளது. டாப் 10 இடங்களில் நெல்லை (தமிழகம்), நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழகம்), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா),சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேபோல, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டில்லி முதலிடத்தில் உள்ளது. காஷியாபாத் (உத்தரபிரதேசம்), பைரனிஹாட் (மேகாலயா), சண்டிகர் (பஞ்சாப்), ஹபூர் (உத்தரபிரதேசம்), தனபாத்(ஜார்க்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உ.பி.,)குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா), நொய்டா (உ.பி.,) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
வாசகர் கருத்து (3)
Naga Subramanian - Kolkatta,இந்தியா
16 ஜன,2025 - 13:12 Report Abuse
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள், "திராவிட மாடல்"தான் இதற்கு காரணம் என்று.
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2025 - 12:37 Report Abuse
திமுகவினர் இதற்கு காரணம் அவர்கள்தான் என்று போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டாடுவார்கள்.
0
0
karthik - Chennai,இந்தியா
16 ஜன,2025 - 13:27Report Abuse
சாமி நம்ம தமிழ்நாடு அரசாங்கத்துக்கும் அந்த துறையை சார்ந்த அமைச்சதுக்கும் கொஞ்சம் நல்ல பெயர் வரட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களிலும் சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்க வேண்டும்.... வேலையே செய்யவில்லை என்று மொத்தமாக கழட்டி விடவேண்டாம் .
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement