காளை முட்டி தொழிலாளி பலி

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளை முட்டி தொழிலாளி பலியானார்.

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. போலீசார், வருவாய்த்துறையினர் அனுமதிக்காத நிலையில் விழாவை பாதியில் நிறுத்தினர்.

அப்போது எருதாட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட காளை சாலையோரம் நடந்து சென்ற கூலித் தொழிலாளி மணிவேல், 43, என்பவர் மீது முட்டி தள்ளியது. இதில் குடல் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்தது.

Advertisement