பாதுகாப்பான உலகம் படைக்க முயற்சி: டிரம்ப் உறுதி

4


வாஷிங்டன்: '' அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகம் படைக்க தேவையான முயற்சிகளை சீன அதிபருடன் இணைந்து மேற்கொள்வேன்,'' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.


வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.


பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த ஆலோசனை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சிறந்ததாக அமைந்தது. நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்பது எனது எதிர்பார்ப்பு. இதற்கான பணிகள் உடனடியாக துவங்கும். சமமான வர்த்தகம், டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்தை படைக்க தேவையான அனைத்தையும் நானும், ஷி ஜின்பிங்கும் இணைந்து எடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement