திறப்பு விழா காணப்படாத காய்கறி சந்தை 'திறந்த வெளி பார்' ஆக மாறிய அவலம்
ஓமலுார்: தினசரி காய்கறி சந்தை வளாகம் கட்டி, 5 மாதங்களாகியும் திறப்பு விழா காணப்படாததால், 'திறந்தவெளி பார்' ஆக மாறி-யுள்ளது.
ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் தினசரி காய்கறி கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், வணிக வளாக கடைகள் உள்ளன. 80க்கும் மேற்-பட்டோர், காய்கறி கடைகளை, வைத்து, காலை, 5:00 முதல், 10:00 மணி வரை வியாபாரம் செய்கின்றனர். அவர்கள், வெயில், மழையிலும் விற்பனை செய்ய வசதியாக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 65 லட்சம் ரூபாய் செலவில், மக்கள் நின்றபடி காய்கறி வாங்கும்படி திட்டு, மேற்கூரை வசதியுடன், 40 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது கட்டி முடித்து, 5 மாதங்க-ளாகியும் திறப்பு விழா காணப்படவில்லை.சில வாரங்களுக்கு முன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திறந்து வைப்பதாக, அவரை வரவேற்று, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டினர். ஆனால் அவசர வேலையால், அமைச்சரால் வர முடியாததால், திறப்பு விழா நடக்கவில்லை.
இந்நிலையில் அந்த கட்டடத்தை, பஸ் ஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவோர், 'திறந்தவெளி பார்' ஆக பயன்படுத்துகின்றனர். அங்கு தினமும், 100க்கும் மேற்-பட்ட மதுபாட்டில்களை, டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியா-ளர்கள் அகற்றி வருகின்றனர். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறாமல் இருக்க, விரைவில் சந்தை வளாகத்தை திறக்க, வியா-பாரிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நளாயினி-யிடம் கேட்டபோது, ''புது கட்டடத்தை திறக்க, விரைவில் நடவ-டிக்கை எடுக்கப்படும். சந்தை வளாகம், அதன் அருகே உள்ள காலி இடத்தை சுற்றி பாதுகாப்பு கருதி கம்பி வேலி அமைக்கும் பணியும் விரைவில் நடக்க உள்ளது,'' என்றார்.