தொழிலாளியை தாக்கியவர் கைது
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை சாலையை சேர்ந்த, கூலித்தொழிலாளி செல்வம், 54. நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு அதே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே, 4 பேர் மது அருந்-திக்கொண்டிருந்ததை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில், 'குடி'மகன்கள் சேர்ந்து, செல்வத்தை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, சீலநாயக்கன்பட்டி தலைமலை சாலையை சேர்ந்த முருகன், 23, என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள், 3 பேரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement