நோட்டர் டேம் ஆப் ஹோலிகிராஸில் பொங்கல் விழா கொண்டாட்டம்
சேலம்: சேலம், குண்டுக்கல்லுார், நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர், புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். பின் ஆடு, மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி மகிழ்ந்தனர். மாட்டு வண்டியில் அமர்ந்து, பள்ளி வளாகத்தை வலம் வந்தனர். மாணவ, மாணவி-யர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்-டன. பின் கலைநிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் செல்வம் பங்கேற்றார். தொடர்ந்து வள்ளி கும்மி ஆட்டத்தில் சாதனை படைத்த ஆசிரியர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரம், அவரது கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. ஏற்பாடு-களை பள்ளி முதல்வர் மரிய சுரேஷ், நிர்வாகி குழந்தைசாமி, துணை முதல்வர் விமல்குமார், ஆலோசகர் கில்பர்ட், ஆசிரி-யர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement