உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவமனை ரூ.1 கோடியில் கட்டுமானப்பணி தொடக்கம்
சேலம்: உயிரியல் பூங்காவில், 1 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்-ளது.
சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், பறவை, பாலுாட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என, 200க்கும் மேற்-பட்ட உயிரினங்கள் உள்ளன. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்படுகிறது. சிறுவர்களுக்கு, 10, பெரியவர்க-ளுக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்கு செவ்வாய்தோறும் பூங்கா செயல்படாது. அங்குள்ள உயி-ரினங்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க தேவை இருப்பின், வெளி மாவட்டத்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வருகின்-றனர். இதனால் பூங்காவிலேயே நவீன கால்நடை மருத்துவ-மனை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உயிரினங்களுக்கு, சேலத்தில் அய்யம்பெருமாம்பட்டி, மாவட்ட கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். அவசர உயர் சிகிச்சைக்கு ஓசூரில் இருந்த வன கால்நடை மருத்துவர் வந்து கொண்டிருந்தார். அப்பணியிடம் காலியாக உள்ளதால் கோவையில் இருந்து மருத்துவர்கள் வருகின்றனர். தவிர சத்திய-மங்கலத்தில் இருந்தும் அலுவலர்கள் வருவர்.
நடுத்தர பூங்காவாக மாற்றப்பட்டதால் வன உயிரினங்களுக்கு, 8,000 சதுர அடியில் நவீன வசதிகளுடன், கால்நடை மருத்துவ-மனை கட்டப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு, 1 கோடி ரூபாய். ஜனவரியில் பணி தொடங்கி துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த மருத்துவமனையில் மருத்துவர் அறை, மருந்தகம், கம்ப-வுன்டர், நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிசிச்சை முடிந்த பின் கவனிக்க, 4 அறைகள், உபகர-ணங்கள் உள்ளிட்ட அறைகள் கட்டப்படும். வரும் ஜூன், ஜூலையில் பணி முடிய வாய்ப்புள்ளது. அதில் வனத்துறையில் பராமரிக்கப்படும் விலங்கினங்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்-படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.