கும்பமேளாவில் ஒரே நாளில் 27 லட்சம் பேர் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளாவில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி 27.8 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் 144 ஆண்டுகளுக்கு பின் மஹா கும்பமேளா நிகழ்ச்சி 13ம் தேதி கோலாகலமாக துவங்கியது. அடுத்த மாதம் மஹா சிவராத்திரி நாளான பிப்.,26 வரை கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. இதில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால், பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று வரை சுமார் 7 கோடி பேர் கும்பமேளாவில் புனித நீராடியிருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி 17.8 லட்சம் பக்தர்கள் மற்றும் துறவிகள், ஆன்மிகவாதிகள் என 27.8 லட்சம் பேர் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

Advertisement