பைனலில் அன்கிதா ஜோடி

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பைனலுக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா ஜோடி முன்னேறியது.
டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ரியா பாட்யா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அன்கிதா ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடிவில் அன்கிதா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
இதில் இன்று அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொள்கிறது.

Advertisement