தெருவிளக்கு இன்றி இருளில் தவிக்கும் மக்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், காந்தி நகர், தேவேந்திர வாகைகுளம், லோக்கல் பண்டு பஜார் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு தெருக்களில் தாழ்வழுத்த மின்கம்பி இல்லாததால் தெருவிளக்குகள் எரியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வார்டு கவுன்சிலர் பார்வதி கூறியதாவது:

பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கடந்த சில ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு தாழ்வு மின்னழுத்த கம்பி இல்லாததால் தெருவிளக்கு அமைக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து பத்து மாதங்களுக்கு முன்பு தாழ்வழுத்த கம்பி அமைப்பதற்கு பேரூராட்சி சார்பில் பணம் கட்டப்பட்டது.

தற்போது வரை மின்வாரியம் காலம் தாழ்த்தி வருவதால் மக்கள் தெரு விளக்கு வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement