பிப்.2ல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
மதுரை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பேட்ஸ்மென், விக்கெட் கீப்பர்களுக்கான தேர்வு பிப். 2 காலை 7:00 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
2003, செப். 1 முதல் 2011 செப். 1 வரை பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள மாஸ்டர்ஸ் மேக்கர்ஸ் நெட்ஸில் தேர்வு நடத்தப்படும். தேர்விற்கு கட்டணம் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோவை 96777 95400ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement