விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடிய போலீசார்
புதுச்சேரி, : விபத்தில்லா புதுச்சேரி என்ற விழிப்புணர்வு பாடலுக்கு போலீசார் நடனமாடினர்.
போக்குவரத்து துறை சார்பில், கடந்த 6ம் தேதி முதல் புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில், புதுச்சேரி வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில், விபத்தில்லா புதுச்சேரி, ஹெல்மெட் கட்டாயம் குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு, போலீஸ் பயிற்சி பள்ளி காவலர்கள் நடனம் ஆடினர்.
போலீஸ் இசை குழு மூலம் இசை நிகழ்ச்சியும் நடந்தது. அதைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலுக்கு லான்ஸ் டான்ஸ் அகாடமி குழுவினரின் நடனமும் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் பங்கேற்றனர்.